Sat. Feb 28th, 2026

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க “மக்களுக்காக, மக்களிடமிருந்து” முயற்சி.

Gingee: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, Bharatiya Janata Party (பாஜக) தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக “மக்களுக்காக, மக்களிடமிருந்து” என்ற தலைப்பில் கருத்து கேட்பு கூட்டம் வியாழக்கிழமை (பிப். 26) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில், செஞ்சி–திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் வி.பி.என். கோபிநாத் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணைத் தலைவர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் கே.ஆர். விநாயகம், வி. காளிதாஸ், விவசாய அணி மாவட்ட தலைவர்கள் டி. சௌரிராஜன், ஆர். சிவசுப்பரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் ஜி. அன்பழகன், கே. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலாளர் ஆர். ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வரவிருக்கும் தேர்தலுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமாக உரையாற்றினார். செஞ்சி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், விவசாய மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, மனுக்களாகவும் வழங்கினர்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துலட்சுமி, மாவட்ட செயலாளர் சிவகாமி, மாவட்ட துணைத் தலைவர் எத்திராஜ், மண்டல தலைவர்கள் தாராசிங், அசோக்குமார், பிரசன்ன வெங்கடாஜலபதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக, செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் (எ) தாராசிங் நன்றி தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்
தமிழ். மதியழகன்

By TN NEWS