Fri. Feb 27th, 2026

ரிஷிவந்தியம் | ஜன.31

கள்ளக்குறிச்சி தெற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மாவட்ட கட்சி செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க. கார்த்திகேயன், B.Sc, MLA அவர்களின் முன்னிலையில், திமுகவில் முக்கிய கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கராபுரம் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி தொகுதி இளைஞர் பாசறை நிர்வாகி மா. புருஷோத்தமன் (B.Com, DCA) மற்றும் அதிமுக கிளை இளைஞர் பாசறை நிர்வாகி ரா. செந்தூரப்பாண்டி ஆகியோர், தங்களது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்த அனைவருக்கும் எம்எல்ஏ வசந்தம் க. கார்த்திகேயன், திமுகவின் இருவண்ண வேஷ்டிகளை அணிவித்து, வாழ்த்துக்களை தெரிவித்தார். திமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் மீதான நம்பிக்கையால் இவ்விணைப்பு நிகழ்ந்ததாக இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்,
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS