Fri. Feb 27th, 2026

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 48 வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதில் 35-வது வார்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜோதிபாசு, தனது வார்டு பகுதியில் பெண்களுக்கு மட்டும் கழிப்பறை வசதி உள்ள நிலையில், ஆண்களுக்கு உரிய கழிப்பறை வசதி இல்லை என குறிப்பிட்டு, இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடமும், மேயர் மற்றும் துணை மேயரிடமும் கோரிக்கை வைத்தார்.

மேலும், சாமியார் தொட்டு பகுதியில் வசிக்கும் மக்களில் ஒரு சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்
சித்திர பிரகாஷ்

By TN NEWS