குடியாத்தம் | ஜனவரி 11 :
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அடையாளமாக விளங்கும் மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது என கடும் கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது;
ஊரக ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கியமான திட்டத்தின் அடையாளத்தை மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை உடனடியாக மீண்டும் பழைய பெயரிலேயே தொடர வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களில் அரசியல் தலையீடு கூடாது.
என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்த பெயர் மாற்றம் ஊரக தொழிலாளர்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மத்திய அரசு தனது முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குடியாத்தம் தாலுகா – செய்திகள்.
K. V. Rajendran
