Sun. Jan 11th, 2026


பெரம்பலூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டி – மாவட்ட அளவில் நடைபெற்றது.

பெரம்பலூர் | ஜனவரி 9, 2025

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப் போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர் ராஜா திரையரங்கம் அருகே நடைபெற்ற இந்த போட்டியை, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து, போட்டியில் பங்கேற்ற பெண்களின் கோலங்களை பார்வையிட்டார்.

பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு:

இந்த கோலப் போட்டியில்,குழுவாகவும், தனிநபராகவும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பல வண்ணங்களை பயன்படுத்தி அழகிய கோலங்களை வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்ற பெண்கள்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா,
மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம்
ஆகிய உருவங்களையும் கோலங்களாக வரைந்திருந்தது
பார்வையாளர்களை ஈர்த்தது.

பரிசளிப்பு,
இதனைத் தொடர்ந்து,
மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
கோலங்களை பார்வையிட்டு,
போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு
கிரைண்டர், மிக்சி, ஹாட் பாக்ஸ் ஆகிய பரிசுகளை வழங்கினார்.

மேலும்,
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும்
ஆறுதல் பரிசாக குத்துவிளக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு,
பெண்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொங்கல் திருநாளின் பாரம்பரிய உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் நடைபெற்றது.

செய்தி: சதீஷ்
இடம்: பெரம்பலூர்

By TN NEWS