Sun. Jan 11th, 2026

ஊழியர்களுடன் இணைந்து பாரம்பரிய முறையில் கொண்டாடிய ஆளுநர் ஆர்.என். ரவி.

சென்னை | ஜனவரி 9, 2026

சென்னை ராஜ்பவன் எனப்படும் மக்கள் மாளிகையில், தமிழர் திருநாளான பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,
2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழா நிகழ்ச்சி  ஒழுங்கமைந்த முறையில் நடைபெற்றது.

விழாக்கோலம் பூண்ட மக்கள் மாளிகை:

பொங்கல் விழாவை முன்னிட்டு மக்கள் மாளிகை வளாகம் முழுவதும்,
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு,
தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில்
பொங்கல் பானை, மாட்டு வண்டி, வைக்கோல் போர் உள்ளிட்ட
அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆளுநர் பங்கேற்பு:

இந்த நிகழ்ச்சியில்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி குடும்பத்தாருடன் கலந்துகொண்டனர்.

ஆளுநருக்கு
ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட
நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன்
பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பு:

விழா நிகழ்ச்சியின் போது,
ஆளுநர் பாரம்பரிய உறி அடித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று,
பல்வேறு பாரம்பரிய நெல் மற்றும் பயிர் வகைகளை
குடும்பத்துடன் பார்வையிட்டு ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

ஊழியர்களுடன் இணைந்து பொங்கல் வைத்தல்:

இதனைத் தொடர்ந்து,
மக்கள் மாளிகை ஊழியர்களுடன் இணைந்து,
பொங்கல் பானையில் அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து
பொங்கல் வைத்து,
தமிழர் திருநாளை இணக்கத்துடன் கொண்டாடினார்.

பொங்கல் வாழ்த்துகள்:

பின்னர்,
மக்கள் மாளிகை ஊழியர்களுக்கு
கரும்பு வழங்கி,
பொங்கல் திருநாள் வாழ்த்துகளை ஆளுநர் தெரிவித்தார்.

இதன் பின்னர் நடைபெற்ற
பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும்
ஆளுநர் பார்வையிட்டு ரசித்தார்.

நிகழ்வில் பங்கேற்றோர்:

இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில்,
பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள்,
மக்கள் மாளிகை சேர்ந்த ஊழியர்கள்,
அழைக்கப்பட்டிருந்த பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு டுடே – சென்னை செய்தியாளர்:
எம். யாசர் அலி.

By TN NEWS