ஜனவரி 6 – நல வாரியம் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் : தீர்மானம்:
தென்காசி | ஜனவரி 2.
தென்காசி மாவட்டம், தென்காசி தாலுகா, கீழ ஆம்பூர் தாட்டான்பட்டி பகுதியில் AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவரும், AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் பரமசிவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் AICCTU தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் எம். வேல்முருகன் மற்றும் AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் தோழர் டி. பொன் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி தென்காசி தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள, கட்டுமான தொழிலாளர்களுக்கான பொங்கல் பரிசு பொருட்கள், போனஸ் மற்றும் நலவாரிய பிரச்சினைகள் தொடர்பான கண்டன போராட்டம் குறித்து அவர்கள் விரிவாக விளக்கினர்.
இந்த கூட்டத்தில்,சங்கத்தின் கிளைச் செயலாளரும், மாவட்ட துணைச் செயலாளருமான மரியசுந்தர்,பொருளாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர் சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
🔸 ஜனவரி 6 (செவ்வாய்க்கிழமை), காலை 10 மணிக்கு
தென்காசி தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன போராட்டத்தில்,
கீழ ஆம்பூர் தாட்டான்பட்டியிலிருந்து 15-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்பது.
🔸 கட்டுமான தொழிலாளர்களுக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன், ரூ.15,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.
🔸 குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ.6,000 வழங்க வேண்டும்.
🔸 கட்டுமான தொழிலாளர்களுக்கான அனைத்து நல வாரிய பணப் பலன்களையும் இரட்டிப்பாக வழங்க வேண்டும்.
🔸 தேவையின்றி கட்டுமான தொழிலாளர்களை அலைய விடும் நடைமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
🔸 மாநிலம் தழுவிய இந்த கண்டன போராட்டத்திற்காக,
போராட்ட நிதியாக ரூ.500 உடனடியாக வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி✊💐