Sun. Jan 11th, 2026

முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள், நல்லாட்சி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு சார்பாக, அச்சங்குளம் பகுதியில் இயங்கி வரும் சார்தீப் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் ‘மனோலயா’ மனவளர்ச்சி குறைபாடு உடையோர் காப்பகத்தில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக அலங்கரிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் நலிந்த மூத்த நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்கு பொற்கிளி மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், மனோலயா காப்பகத்தில் தங்கியுள்ள 120 மனவளர்ச்சி குறைபாடு உடைய நபர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பா.ஜ.க மாவட்ட தலைவர் பா. மதுசூதன பெருமாள் தலைமையில் நடைபெற்றது.அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் அனுஜா சிவா முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில செயலாளர் திரு. அஸ்வத்தாமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்:
பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் மணி சுவாமிகள்,
தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர்கள் காமராஜ், ரெத்தின பாண்டியன்,
மாவட்ட செயலாளர்கள் மயிலை சிவம், முருகேசன், மகாலிங்கம், ரமேஷ் சுந்தர், ரெதீஷ், மாரிமுத்து, ஷீலா ராஜன்,
வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் வழக்கறிஞர் பத்மநாபன்,
சமூக ஊடக பொறுப்பாளர் பொன் வெனிஸ்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரமேஷ்,
கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,
நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் வேணுகிருஷ்ணன்,
தொழில் வல்லுநர் பிரிவு மாவட்ட செயலாளர் மாணிக்கம்,
மனோலயா நிறுவனனர் மணிகண்டன்,
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தலைவர் ஆர். என். பாபு,
தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவு அகஸ்தீஸ்வரம் தெற்கு மண்டல் தலைவர் குமார்,நாகர்கோவில் கிழக்கு மண்டல் தலைவர் ஹரிஷ்,இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் அசோகன்,கபடி வீரர் சுபாஷ்,அகஸ்தீஸ்வரம் வடக்கு மண்டல் பொருளாளர் ராஜேஷ்,ரத்தினசாமி, ஜெயச்சந்திரன், கருப்பசாமி உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்திரன்
சென்னை மாவட்ட செய்தியாளர் / புகைப்படக் கலைஞர்

By TN NEWS