கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்பொன்கரை பகுதியில் அமைந்துள்ள பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில், இரும்பினாலான கொட்டகை அமைக்கும் பணிக்காக, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் கட்டப்பட்ட இரும்புக் கொட்டகையினை, கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு தளவாய் சுந்தரம் அவர்கள் இன்று (28.12.2025) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில்,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் திரு. சுகுமாரன்,
இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. வீராசாமி,
தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. முத்துக்குமார்,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திரு. அக்ஷ்யா கண்ணன்,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட டாஸ்மாக் பிரிவு செயலாளர் திரு. மணிகண்டன்,
திரு. N.M. செல்வகுமார்,
இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் திரு. காட்வின்,
இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் திரு. முருகன்,
புத்தளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் திரு. விஜயன்,
இராஜாக்கமங்கலம் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் திரு. கண்ணன்,
செம்பொன்கரை ஊர் தலைவர் திரு. ராஜேந்திரன்,
மேலும் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த இரும்புக் கொட்டகை அமைப்பு, கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
இந்திரன்
சென்னை மாவட்ட செய்தியாளர் / புகைப்படக் கலைஞர்

