Sun. Jan 11th, 2026

தென்காசி மாவட்டம், கடையநல்லூர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், இடைகால் அருகே உள்ள பிளசிங் சர்ச் வளாகத்தில், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிளசிங் சர்ச் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பிளசிங் சர்ச் தலைமை போதகர் ஜெயராஜ் முத்தையா தலைமை வகித்தார். தமிழ்நாடு பிரஸ் கிளப் மாவட்ட செயலாளர் ரூபன் ராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிரஸ் கிளப் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கடையநல்லூர் பதிவுத்துறை சார்பு ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழாவில், தமிழ்நாடு பிரஸ் கிளப் மாநில பொருளாளர் டாக்டர் புதிய செல்வம் அவர்களின் மகள் லனியா அவர்களின் ஐந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை எளியவர்களுக்கு புத்தாடைகள், அரிசி பைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த பிளசிங் சர்ச் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு பிரஸ் கிளப் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரூபன் ராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பாகவும், பத்திரிகையாளர்கள் சார்பாகவும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

இவ்விழாவில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டு, விழா இனிதே நிறைவுற்றது.

வெங்கடேஷ்
செய்தி ஆசிரியர்
தமிழ்நாடு டுடே

By TN NEWS