24.12.2025
சென்னை – மாதவரம்
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வந்த சரவணன், இதற்கு முன்பு யானைகவுனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகவுனி காவல் நிலையத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், சவுகார்பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல் நடவடிக்கையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் சில நிர்வாகக் குளறுபடிகள் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விசாரணையின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சரவணன் தற்போது திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் தொடர்பான மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த இடமாற்றம் மாதவரம் காவல் நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு டுடே
சென்னை செய்தியாளர் – எம். யாசர் அலி


