நெல்லை, டிசம்பர் 21 :
நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை,
SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள்,
இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது,
சுதந்திரப் போராட்ட வீரர் சிராஜுத்தௌலா அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை முதலமைச்சருக்கு வழங்கினார்.
மேலும்,
தமிழ்ப் பெருமையை எடுத்துச் சொல்லும் பொருநை அருங்காட்சியகம்,
மக்களின் உயிர் காக்கும் வகையிலான மருத்துவமனை திட்டங்கள்,
நெல்லை மக்களின் அறிவுப் பசிக்கு உதவும் வகையில்,
கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் பெயரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதை பாராட்டி வரவேற்றார்.
நெல்லையின் அடையாளங்களாக;
நெல்லையப்பர் கோயில்,
திருவள்ளுவர் இரட்டைப் பாலம்,
தாமிரபரணி நதி ஆகியவற்றின் வரிசையில்,
இனி பொருநை அருங்காட்சியகமும்,
மாபெரும் அறிவுத் திருக்கோயிலாக அமையவுள்ள காயிதே மில்லத் நூலகமும் இடம் பெறும் எனக் குறிப்பிட்டார்.
இந்த நூலகத்தின் மூலம்,
நெல்லை மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின்போது,
SDPI நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கேட்டூர் பீர் மஸ்தான்,
மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி,
மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர்ஷா,
மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி நிர்வாகிகள்
பர்கிட் அலாவுத்தீன், ஹைதர் அலி இமாம், சனா சிந்தா, இஸ்மாயில், நிஜாமுதீன், கரீம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
✍️ ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர் – தென்காசி