கடத்தூர் கிழக்கு ஒன்றியம் | டிசம்பர் 18.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, தருமபுரி மேற்கு மாவட்டம், *பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி (60)*க்குட்பட்ட குருபரஹள்ளி ஊராட்சி – வாக்குசாவடி எண் 168, 169 ஆகிய இடங்களில்,
“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி” என்ற முழக்கத்துடன் Booth Level Campaign Focus கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் உத்தி அடிப்படையிலும்,
மாண்புமிகு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் Booth-to-Booth அணுகுமுறையின்படியும்,
வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த செயல் திட்டம் வகுக்கப்பட்டது.
மேலும், மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிராம, விவசாயி மற்றும் உழவர் மையப்படுத்திய வாக்குச் சேகரிப்பு திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
Booth Level Command : கழக நிர்வாகிகள் தலைமையில் திட்டமிடல்.
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்களின் முன்னிலையில்,
கடத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் த. நெப்போலியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,
ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் தனித்தனி Action Plan – Vote Target – Cadre Responsibility ஆகியவை வகுக்கப்பட்டன.
2026 தேர்தல் வெற்றிக்கான முக்கிய தீர்மானங்கள் :
ஒவ்வொரு வாக்குசாவடியையும் Mini Election War Room ஆக மாற்றுவது,
BLA2, BDA, BLC உள்ளிட்ட நிர்வாகிகளை முழுமையாக பயன்படுத்தி,
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, புதிய வாக்காளர் சேர்த்தல்
வீடு–வீடாக பரப்புரை,
கழக அரசின் சாதனைகள்;
சமூகநீதி, மகளிர், விவசாயி, இளைஞர் நலத் திட்டங்கள்
இளைஞரணி, ஆதிதிராவிட நலக்குழு, இலக்கிய அணி உள்ளிட்ட அணிகளின் Target-Based Campaign செயல்பாடு,
ஒவ்வொரு வாக்குசாவடியிலும் Vote Margin Increase குறிக்கோள் நிர்ணயம்.
கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் :
மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் ரமேஷ்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமணி, காந்தி, நித்யா இளவரசன்,
மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பார்த்திபன்,
குப்புசாமி, சார்லஸ், பாண்டு, ஜெகநாதன், ஞானம், காமராஜ் உள்ளிட்டோர்
மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு, 2026 தேர்தலில் கழக வெற்றியை உறுதி செய்யும் வகையில் உறுதியெடுத்தனர்.
தீர்மானம்:
“ஒவ்வொரு வாக்குசாவடியும் வெற்றியின் அடிப்படை” என்ற கோட்பாட்டுடன்,
கடத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் தொடங்கிய இந்த Booth Level Campaign,
2026 சட்டமன்றத் தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்
கழக வெற்றிக்கான வலுவான அடித்தளமாக அமையும் என தீர்மானிக்கப்பட்டது.
மண்டல செய்தியாளர் :
D. ராஜீவ்காந்தி
