Tue. Dec 16th, 2025

 

விக்கிரவாண்டி:

திமுக கட்சி துணை பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மருத்துவர் பொன்.கெளதம சிகாமணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, விக்கிரவாண்டி V.சாலை ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகம் சார்பில் 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான துவக்க நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா அடிக்கல் நாட்டினார்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் ம.ஜெயச்சந்திரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சங்கீதாஅரசி, பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், ஒன்றிய குழு துணை தலைவர் ஜீவிதா, ஒன்றிய கட்சி செயலாளர் ஜெ.ஜெயபால், J.ரவி, R.முருகன், கவுன்சிலர் சாவித்ரி, ஊராட்சி மன்ற தலைவர் கவியரசன், கலை இலக்கிய மா.அ. கலைச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் சாவித்திரி, பாலு துரை, ராம்குமார், இளைஞரணி பாலகிருஷ்ணன், சங்கர், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், அசோக்குமார், கிருஷ்ணன், அரிகிருஷ்ணன், கங்காதரன், கருணாநிதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

V.ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS