Wed. Dec 17th, 2025



சென்னை | டிசம்பர் 2025 :

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கியிருக்கலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி வருகிறது.
எனினும், இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தொடர்ந்த மறுப்பு நிலவி வரும் சூழலில், ஒபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வந்த “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு”, இனி
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்” என்ற பெயரில் செயல்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒபிஎஸ் வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில்,
“உரிமை மீட்பு குழு” என்பதற்கு பதிலாக
“உரிமை மீட்பு கழகம்” என குறிப்பிடப்பட்டிருப்பதும்,
முகவரி மாற்றமும்,
புதுக்கட்சி தொடர்பான ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள YMCA அரங்கில் நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,
புதுக்கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.

அதே நேரத்தில்,
டிச.23 கூட்டத்திற்குப் பிறகே முழு தெளிவு கிடைக்கும் என்றும்,
அதுவரை இது அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவலாகவே பார்க்கப்படுகிறது.

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர் | தமிழ்நாடு டுடே

By TN NEWS