Wed. Dec 17th, 2025



குடியாத்தம் | டிசம்பர் 13 —
தலைமுறை பேரவை, வேலூர் மற்றும் ஸ்ரீ நாராயணி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான மாபெரும் பொது சிறப்பு மருத்துவ முகாம் இன்று குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் தலைமை தாங்கினார். ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சார்பில் பாலாஜி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டி. ராஜா, வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன், கே.எம்.ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கே.எம்.ஜி ராஜேந்திரன், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என். பழனி, புலவர் பதுபனார், வழக்கறிஞர் கே.எம். பூபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆர்.வி. ஹரிகிருஷ்ணன், குமரகுரு, கோபிநாத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் 6 நபர்களுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கான நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுப் பொருட்களும், அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.

செய்தி:
கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்.

By TN NEWS