Wed. Dec 17th, 2025

முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அறிவுறுத்தல்.

புதுக்கோட்டை, டிசம்பர் 11:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிடர் நலம் மற்றும் மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம், தலைமை ஆசிரியர்களுக்கு பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அரையாண்டுத் தேர்வு – குறைபாடின்றி நடத்த வேண்டும்

அரையாண்டுத் தேர்வுகளை எவ்வித புகாரும் எழாத வகையில் சீராக நடத்த வேண்டும்.
மேலும், அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 100% கிடைக்கும் வகையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை – 100% அடிப்படைத் திறன் கட்டாயம்

தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் திறன் குறைவாக கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு,
அரசு வரையறுத்த காலத்திற்குள் 100% அடிப்படைத் திறனை (Foundational Competency) அடையச் செய்வதற்கான பயிற்சியை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதனை தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாணவர் கல்வி உதவித்தொகை – நிலுவைகள் நீக்கம்

மாணவர்களின் கல்வி உதவித்தொகை தொடர்பாக,

வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைத்தல்

கைரேகை (Biometric) புதுப்பித்தல்
உள்ளிட்ட நிலுவைகளை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
தகுதியுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் உதவித்தொகை கிடைப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

EMIS & UDISE PLUS புதுப்பிப்பு – காலக்கெடு பேணல்:

மாணவர்கள் பெறும் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் EMIS முறைமையில் தவறாமல் பதிவேற்றப்பட வேண்டும்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் UDISE Plus தரவு புதுப்பிப்பு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முழுமை பெற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு:

பள்ளி வளாகத்திலும் சுற்றுப்புறத்திலும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தொழில்நுட்ப வாய்ப்புகளைப் பயன்படுத்தி கற்பித்தல்:

வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, செயலிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி கற்பித்தல் தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் முனைப்புடன் செயல் பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பள்ளி வளர்ச்சியில் தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு:

அவ்வப்போது கேட்கப்படும் தகவல்களை துல்லியமாக வழங்கி, பள்ளியின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சண்முகம் அவர்கள் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:

இந்த கூட்டத்தில்:

மாவட்டக் கல்வி அலுவலர்கள் முனைவர் ஆரோக்கியராஜ், ரவிச்சந்திரன்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் செந்தில்

முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், வெள்ளைச்சாமி

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில்

மணற்கேணி செயலியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட்சென்னி

பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு மாரிமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: M. மூர்த்தி, மாவட்ட தலைமை செய்தியாளர், புதுக்கோட்டை

By TN NEWS