Thu. Dec 18th, 2025



தர்மபுரி | டிசம்பர் 11

தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இத்திருமண விழாவில், மு.க. ஸ்டாலின்
(மாண்புமிகு தமிழக முதல்வர்) மற்றும்
உதயநிதி ஸ்டாலின்
(துணை முதல்வர்) ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

இத்திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
(வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்), திருமணம் நடைபெற உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்,
அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்க உள்ளதால், விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மண்டல செய்தியாளர்:
ராஜீவ் காந்தி
தர்மபுரி


By TN NEWS