Fri. Dec 19th, 2025

சென்னை மாவட்டம் | 09.12.2025

கொளத்தூர் – ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஸ்கேன் மையம் ஒன்றில்,
ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற 47 வயதுடைய திருமணமான பெண் ஒருவரிடம்,
மையத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்,தனது கணவருடன் இணைந்துராஜமங்கலம் காவல் நிலையம் நேற்று புகார் அளித்துள்ளார்.

🚨 விசாரணை – கைது:

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்,நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர்,சென்னையில் தங்கி அந்த தனியார் ஸ்கேன் மையத்தில் பணியாற்றி வந்ததும், புகாருக்குரிய சம்பவத்தில் அவர் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெண்கள் தொடர்பான பாதுகாப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த இளைஞரை இன்று காலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

⚠️ காவல்துறையின் அறிவுறுத்தல்:

மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் பெண்கள் எந்தவொரு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையையும் அமைதியாக அனுமதிக்காமல்,
உடனடியாக உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர்: எம். யாசர் அலி

By TN NEWS