
முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் மாணவர், ஆசிரியருக்கு பாராட்டு:
புதுக்கோட்டை | டிசம்பர் 9
புதுக்கோட்டை மாவட்டம்,தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் என். பர்ஹான்,
வழிகாட்டி ஆசிரியர் ஜோஸ்பின் மாலதி அவர்களின் வழிகாட்டலுடன், “ஒரு மாணவர் – ஒரு காட்சி பொருள்” திட்டத்தின் கீழ் புள்ளி பற்றவைப்பு இயந்திரம் (Spot Welding Machine) என்ற தலைப்பில் மாதிரி காட்சியமைத்து,
மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் பயனாக,கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்று, வருகின்ற ஜனவரி மாதம் ஹைதராபாத் (தெலுங்கானா) நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தகுதி பெற்றுள்ளார்.
🎖️ முதன்மைக்கல்வி அலுவலரின் பாராட்டு:
இதனைத் தொடர்ந்து,மாணவர் என். பர்ஹான் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் ஜோஸ்பின் மாலதி ஆகியோர்,முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அவர்களை சந்தித்து பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பில்,
முதன்மைக் கல்வி அலுவலர் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி,
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற வாழ்த்தினார்.
👥 நிகழ்ச்சியில் பங்கேற்றோர்:
வெள்ளைச்சாமி – நேர்முக உதவியாளர் (இடைநிலை)
முனைவர் மெ.சி.சாலை செந்தில் – மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்
லாரன்ஸ் அலெக்ஸாண்டர் – பள்ளித் தலைமையாசிரியர்
செய்தி: M. மூர்த்தி
மாவட்ட தலைமை செய்தியாளர், புதுக்கோட்டை
