
🟥 குடியாத்தம் குலுங்கியது – 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறப்பான சேவை.
வேலூர் | டிசம்பர் 9.
குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில்,
தமிழ்நாடு திராவிட முன்னேற்ற கழகம் வேலூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில்,
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சி. ஜெயந்தி பத்மநாபன் தலைமையேற்றார்.
நகர்மன்ற தலைவர் சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
✅ வழங்கப்பட்ட உதவிகள்:
1,048 மகளிருக்கு புடவைகள்
248 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை, குடை
248 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை
148 மகளிர் கபாடி வீராங்கனைகளுக்கு சீருடை
48 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி
🎤 விழாவில் சிறப்புரை:
அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார்
குடியாத்தம் எம்.எல்.ஏ. வி. அமுலு விஜயன்
முன்னாள் எம்.பி. தி.அ. முகமது சகி
🎺 முன்னதாக செண்டை மேளம், வாண வேடிக்கை, பூரண கும்ப மரியாதையுடன் நந்தகுமார் வரவேற்கப்பட்டார்.
🎉 விழாவில் பல்வேறு கழக நிர்வாகிகள், ஒன்றியத் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
🙏 இறுதியில், குடியாத்தம் நகர மகளிர் அணி செயலாளர் ஆர். பிரியா நன்றி தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
