Tue. Dec 16th, 2025

வேலூர் | டிசம்பர் 9

குடியாத்தம் நகரம், வார்டு 31 – இரண்டாவது ஆண்டியப்பன் முதலிய தெருவில் கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் முறையாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கழிவுநீர் கால்வாயின் நடுவே இரண்டு மரங்கள் வளர்ந்துள்ளதால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், கழிவுநீர் செல்லும் பாதையில் சில வீடுகள் கட்டப்பட்டிருப்பதும் பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

⚠️ இனிமேலாவது நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்




By TN NEWS