Wed. Dec 17th, 2025

 

 

 

தருமபுரி:

தமிழ் நாடு முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் எதிர்வரும் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் MRK. பன்னீர்செல்வம், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P. பழனியப்பன் அவர்களின் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது.

வடக்கு மண்டல மாநாடு – முக்கிய அறிவிப்பு:

எதிர்வரும் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வரும், கழக இளைஞர் அணி செயலாளருமான
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பொதுப் பணித்துறை அமைச்சருமான
எ.வ. வேலு அவர்கள் வரவேற்புரை ஆற்றவுள்ளார்.

மேலும்,
மாண்புமிகு கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான
மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்ட நிகழ்வுகள்:

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். சிவகுரு அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் P. S. சீனிவாசன் அவர்கள், வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடர்பாக விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்:

P.M.C. மகேஷ்குமார்

P.D. ஹரிபிரசாத்

A. நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முக்கிய தீர்மானம்:

வரவிருக்கும் வடக்கு மண்டல இளைஞர் அணி சந்திப்பு கூட்டத்தில், ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு, பாக நிலை இளைஞர் அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொள்வது என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள்,
ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

📍 மண்டல செய்தியாளர்:
ராஜீவ் காந்தி

By TN NEWS