Wed. Dec 17th, 2025

குடியாத்தம், டிசம்பர் 7:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 58 வயது கூலித் தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த மரத்தச்சு தொழிலாளி வெங்கடேசன் (58) என்பவர், குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கி மரத்தச்சு வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது சக தொழிலாளியின் 10 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையம்-இல் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், வெங்கடேசன் (58) என்பவரை போக்சோ சட்டம் (POCSO Act) அடிப்படையில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


📍 குடியாத்தம் தாலுகா செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS