
பழனியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் : ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி கடும் போராட்டம்
TAMILNADU TODAY இதழின் வன்மையான கண்டனம்.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்கிழமை ஆய்வுப் பணிக்குச் சென்றனர். திருக்கோயில் சொத்துக்களை மீட்டெடுக்க துறை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், மாதவரம் அருகே ஏற்பட்ட ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் குழு ஆய்வினை மேற்கொண்டது.
ஆய்வின்போது பதற்றம்:
ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சூழ்நிலை பதற்றமாக மாறியதை தொடர்ந்து அங்கு செய்தி சேகரிக்க வந்த பல ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் சம்பவத்தை படம் பிடிக்கவும், தகவல் பதிவு செய்யவும் முனைந்தனர்.
செய்தியாளர்கள் மீது தாக்குதல்:
அப்போது, பழனி திருக்கோயில் ஊழியர்கள் சிலர் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்த முயன்றதோடு,
காணொளி எடுப்பதைத் தடுக்கவும் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் பல பத்திரிகையாளர்கள் தலையில், கைகளில் உண்டான காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் சாலை மறியல்:
செய்தி சேகரிப்பது போது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி
பழனி முக்கிய சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சம்பவம் தொடர்பாக;
தமிழ்நாடு டுடே அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தாக்குதல் நடத்திய ஊழியர்கள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
“செய்தி சேகரிப்பது உரிமை; அத்தகைய உரிமையை மீறி பத்திரிகையாளர்களின் மீதான தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயல்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Today இதழின் கண்டனம்.
TAMILNADU TODAY செய்தி இதழ், சம்பவத்தில் காயமடைந்த செய்தியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும்,
அவர்களை தாக்கிய பழனி திருக்கோயில் ஊழியர்கள் மீது துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
“ஊடகம் ஜனநாயகத்தின் கண்கள். அந்தக் கண்களை காயப்படுத்த முயலும் எந்த செயலும்
ஊனமுற்ற சமூகத்தையே உருவாக்கும்,” என இதழ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.
