ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் பக்தர்கள் தங்க வசதிக்காக புதிய மண்டபம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஏர்வாடி தர்காவிற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தங்கும் வசதியை மேம்படுத்துவதற்காக, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் தனது சொந்த நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மண்டபம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அடிக்கல் நாட்டு விழாவில் தர்கா ஹக்தார் இமாம் மௌலவி பயாஸ் அஹமது துவா ஓதினார்.
சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் உதவியாளர் கண்ணன், சத்தியேந்திரன், மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, அவ்வை தலைவர் வில்லியம் சார்லஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் நவ்பாதுஷா, முன்னாள் கவுன்சிலர் பிச்சை, கிளைச் செயலாளர்கள் ஆற்றங்கரையான், ராமு, சலீம் மாலிக், பிஎல்ஏ–2 சத்தியேந்திரன், காலீது, இபுனு தினேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தர்கா நிர்வாக சபை சார்பில் மூத்த உறுப்பினர் செய்யது இப்ராஹீம் லெப்பை, உப தலைவர் முஹம்மது சுல்தான் லெப்பை ஆகியோரும் பங்கேற்றனர்.
செந்தில்குமார், மாவட்ட செய்தியாளர்