Thu. Dec 18th, 2025


நவம்பர் 27 – குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு 36ஆம் வார்டு நகர மன்ற உறுப்பினர் மனோஜ் தலைமை தாங்கினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, இனிப்புகள் வழங்கி நூலகத்தை திறந்து வைத்தார்.

இதில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்கள்:

குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்

நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன்

மேலும் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்:

முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கம்பன் என்கிற ஸ்டான்லி

பெரிய கோடீஸ்வரன் ஜம்புலிங்கம்

ஜே.கே.என். ஜெகதீசன்

29வது வார்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் திறப்பு:

29வது வார்டு புறவழிச் சாலையில், சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தையும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்.

இதில் கலந்து கொண்டவர்கள்:

நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன்

நகர மன்ற உறுப்பினர் கே.வி. கோபாலகிருஷ்ணன்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS