வேலூர் மாவட்டம் – குடியாத்தம் | நவம்பர் 23
குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலனைக் கருத்தில் கொண்டு மாதந்தோறும் நடைபெற்று வரும் உதவி வழங்கும் திட்டத்தின் 93வது மாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காலங்களில் தொடங்கப்பட்ட இந்த தொண்டு முயற்சியில், கடந்த 92 மாதங்களாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள், தூய்மை பணியாளர்கள் என 100 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரிசி, பருப்பு, சேமியா, ரவை, புடவைகள், போர்வைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று நடைபெற்ற 93-வது மாத வழங்கல் நிகழ்வில், பயனாளர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கே.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
நகர மன்ற உறுப்பினர் ஜி.எஸ். அரசு கலந்து கொண்டு ஏழைகளுக்கு போர்வைகள் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்
கே.வி. குப்பம் செய்தியாளர் குபேந்திரன்
தமிழ் அஞ்சல் செய்தியாளர் வெங்கடேசன்
மாலை முரசு செய்தியாளர் முத்துக்குமரன்
அவர்கள் அனைவரும் சமூக நலத்துக்காக நடைபெறும் இந்த திட்டத்தை பாராட்டி சிறப்புரையாற்றினர்.
மொத்தம் 100 நபர்களுக்கு போர்வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இறுதியில் கவிதா நன்றி கூறினார்.
தமிழ்நாடு டுடே செய்தியாளர்