குடியாத்தம் நகரில் நடைபெற்ற வாகன தணிக்கையின் மூலம் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கதன், உதவி ஆய்வாளர்கள் ஜெயந்தி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று இரவு சேம்பள்ளி–கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். ஆரம்ப விசாரணையில் சரியான பதில்களை அளிக்காததால், இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள்:
தனசேகர் (37) – அம்மனாங்குப்பம் கிராமம், குடியாத்தம் அருகில் கமல் (28) – சித்தாத்தூர் கிராமம், குடியாத்தம் அருகில்
என்பதும், இவர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதன்படி, போலீசார் இவர்களிடம் இருந்து திருடப்பட்ட 7 பைக்குகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22.11.2025 – குடியாத்தம்
தாலுக்கா செய்தி
செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்
