இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்குகள் பயன்படுத்த தடை – 2 நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை…!
இராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு வாகனங்கள் போன்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் தவிர, எந்தவொரு தனியார் வாகனத்திலும் சிவப்பு–நீல நிற ஸ்ட்ரோப் (Red–Blue Strobe) விளக்குகளை பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
சில அரசியல் கட்சியினர், தனியார் கார்கள், மற்றும் கனரக வாகனங்களில் இந்த விளக்குகளை சட்டவிரோதமாக பொருத்தி பயன்படுத்தி வருவது காரணமாக,
அவசர சேவை வாகனங்களை அடையாளம் காண பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். உண்மையான அவசர சேவை தடங்கலுக்கு உள்ளாகும் அபாயமும் அதிகரிக்கிறது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள்,
🔹 “சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம்.
🔹 2 நாட்களுக்குள் தாமாகவே அகற்ற வேண்டும்.
🔹 இல்லையெனில் கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகரித்து, விதிமுறைகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாடு டுடே செய்தியாளர்,
இராமநாதபுரம் மாவட்டம்.
