சாலைமறியல் போராட்டம் – விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை தொடக்கம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் மேலான்மறை நாடு சாலையின் மோசமான நிலையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வலையப்பட்டி பகுதியில் மழைக்காலங்களில் சாலை முழுமையாக சேதமடைந்து, இரு சக்கர வாகனங்கள் முதல் ஆம்புலன்ஸ் வரை எந்தவொரு வாகனமும் பாதுகாப்பாகச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த அவலத்தைக் கண்டித்தும், உடனடி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் திடீர் போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன்,
வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன்,
சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார்,
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆனந்தகுமார், உமாதேவி, ஆனந்தி
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை திருத்தப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை நிறுத்தினர்.
அழகர் சாமி
விருதுநகர் மாவட்டம்

