Wed. Nov 19th, 2025



கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும் அழைக்கின்றனர். ஆறுகள், குளங்கள் போன்ற இடங்களில் மாசடைந்த தண்ணீர் மூக்குக்குள் சென்றால் ஏற்படும் அபாயம் அதிகம்.

சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்:

🔴 ஆறுகளில் குளிக்கும் போது கவனம்
மூக்குக்குள் தண்ணீர் செல்லாமல் மிகுந்த கவனத்துடன் குளிக்க வேண்டும்.

🔵 மருத்துவர்கள் வழங்கிய மருந்துகளை தொடர்ந்து சாப்பிடவும்
ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்னைகளுக்கான மருந்துகளை நிறுத்தாமல் தொடர வேண்டும்.

🟢 மருத்துவ ஆவணங்கள் அவசியம் எடுத்துச் செல்லவும்
சிகிச்சையில் இருப்பவர்கள் மருந்துகள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ ஆவணங்களை ஏந்தி செல்ல வேண்டும்.

🔴 பயணத்திற்கு முன் நடைபயிற்சி செய்யவும்
சபரிமலை ஏறுவதற்கு உடல் தயாராக இருக்க எளிய நடை பயிற்சிகள் உதவும்.

🔵 மலை ஏறும் போது மெதுவாக ஏறவும்
அளவான இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொண்டு மெதுவாக ஏறுவது நல்லது.

🟡 கொதிக்க வைத்த நீரையே குடிக்கவும்
பாதுகாப்புக்காக குடிப்பது கொதிக்க வைத்த அல்லது பாட்டில் நீராக இருக்க வேண்டும்.

🟠 உணவு முன் கைகளை கழுவவும்
தூய்மை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

🟢 பொது சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கவும்


ஷேக் முகைதீன்

இணை ஆசிரியர்

By TN NEWS