🚆 பயணிகள் கவனத்திற்கு!
அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) காலை 8 மணி முதல் தொடங்கியது.
🎫 டிசம்பர் 24ஆம் தேதி பயணம் செய்பவர்கள் இன்று முன்பதிவு செய்யலாம்.
🎫 டிசம்பர் 25ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி, பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் ரயில்களில் டிக்கெட்கள் நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
IRCTC இணையதளம் அல்லது Rail One செயலி வழியாகவும், ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் நேரடியாகவும் டிக்கெட்டுகள் பெறலாம்.
🪪 ஆதார் அல்லது ஏதேனும் அடையாள அட்டை அவசியம்.
💳 ஆன்லைன் கட்டண வசதி – கிரெடிட்/டெபிட் கார்டு மூலம்.
📅 முன்பதிவு ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு தொடங்கும்.
பயணிகள் உடனே தங்களது டிக்கெட்டுகளை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்.
#TamilNaduTrains #IRCTC #ChristmasHolidays #RailwayBooking #TravelUpdate #PublicAlert #முல்லைமீடியா #தமிழ்நாடு #பயணிகள்கவனத்திற்கு
