Wed. Nov 19th, 2025



டெல்லியில் நடந்த கார் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், I.P.S., அவர்கள் நேற்று இரவு நேரில் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்தார்.

அப்போது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீது முழுமையான சோதனை நடத்தி, கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யவும் காவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

செந்தில் குமார்
இராமநாதபுரம் மாவட்டம்

By TN NEWS