பரமக்குடி (நவம்பர் 11):
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் கடையில் வேலை செய்து வந்தவர். நேற்று (11.11.2025) இரவு பணியை முடித்துவிட்டு மார்க்கெட் வீதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, மூவர் வந்தனர்.
அவர்களுடன் ஏற்பட்ட தகராறில், கார்த்திக்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கத்தியால் தாக்க முயன்றுள்ளனர். உயிர் பிழைக்க ஓடிய கார்த்திக்கை துரத்திச் சென்ற அந்த மூவர், அரிவாளால் பின்னந்தலையில் வெட்டி கொலை செய்துவிட்டனர்.
உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூரக் கொலை பரமக்குடி மக்களிடையே பரவலான பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
📸 செய்தியாளர்: செந்தில்குமார்
ஒளிப்பதிவாளர்: இராமச்சந்திரன்
