Sun. Jan 11th, 2026



நவம்பர் 10 – குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் பகுதியில் இன்று மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றது.

செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த திரு. மோகன் – லலிதா தம்பதியரின் மகள் துர்கா (வயது 2) என்பவர் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, மேல்பட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் பேருந்து அந்த வழியாக சென்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், சிறுமி பேருந்தின் முன்சக்கரத்துக்குக் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும், குடியாத்தம் கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி. ராஜேந்திரன்

By TN NEWS