தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் அருகே இன்று மாலை நடைபெற்ற துயர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரையில் இருந்து போடி நோக்கி வந்த ரயில்வே இன்ஜின் இன்று (நவம்பர் 9) மாலை சுமார் மூன்று மணி முப்பது நிமிட அளவில் பரிசோதனை ஓட்டமாக வந்தது. அந்த நேரத்தில் தண்டவாளம் அருகே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பத்திரகாளி (வயது 70) என்ற மூதாட்டி, ரயில் இன்ஜின் நெருங்குவதை கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
திடீரென ரயில் இன்ஜின் நெருங்கியதை கண்டு, தன் ஆடுகளை காப்பாற்றும் முயற்சியில் பத்திரகாளி தண்டவாளத்தில் ஓடிவந்ததாகவும், அதே நேரத்தில் ரயில் இன்ஜின் வேகமாக வந்ததால் அவர் மீது மோதியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் பத்திரகாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியானார். அவர் மேய்த்துக்கொண்டிருந்த சுமார் 22 ஆடுகளும் இந்த விபத்தில் பலியாகின.
பத்திரகாளி அவர்கள் தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சின்னக்காலையின் மனைவியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்குறைவுக்கு தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
தகவலின்படி, தினசரி மாலை 6.15 மணிக்கு வரக்கூடிய ரயிலுக்குப் பதிலாக, இன்று மாலை 3.30 மணியளவில் பரிசோதனை ஓட்டமாக இன்ஜின் வந்ததால் மூதாட்டி அதைப் புரிந்துகொள்ள முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
செய்தி தொடர்பாளர்:
அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்
தமிழ்நாடு டுடே நாளிதழ்

