செப்டம்பர் 9 — குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் திரையரங்க உரிமையாளரும், சக்தி கலாலயா நிறுவனத்தின் தலைவருமான திரு. கே.டி. ரவி வேந்தன் (வயது 72) அவர்கள் 08.11.2025 மாலை 6.30 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் கடைசி ஆசை மற்றும் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில், அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டு, வேலூரில் உள்ள சென்னை அகர்வால் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கப்பட்டது.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
கண் தானத்திற்காக முன்வந்த அவரது மனைவி திருமதி லலிதா (முன்னாள் இன்னர்வீல் சங்கத் தலைவர்), மகள் அஸ்வினி, மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் பாராட்டுக்கள்.
இந்த கண் தானம் நிகழ்வை ஒருங்கிணைத்து உதவியவர் — கண் மற்றும் உடல் தானம் தலைவர் திரு. கோபிநாத் அவர்கள்.
அவர் நன்றி தெரிவித்தார்.
📸 செய்தி: கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
