வேலூர் மாவட்டம், நவம்பர் 8:
காட்பாடி நுகர்வோர் வாணிபக் கழகக் குடோனிலிருந்து சுமார் 90 டன் ரேஷன் அரிசி ஏற்றிய மூன்று லாரிகள், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் குடோனுக்குக் கொண்டு வரப்பட்டன.
அந்நேரத்தில், பருவமழையால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சுற்றிய மைதானம் சகதியாகி தண்ணீர் நிறைந்திருந்ததால், லாரிகள் மூன்றும் அந்த சகதியில் சிக்கிக் கொண்டன. இதனால் அரிசி இறக்கும்நடவடிக்கை தாமதமாகி, ஓட்டுநர்களும் தொழிலாளர்களும் அவதிப்பட்டனர்.
இச்சூழ்நிலையில், பொதுமக்கள் தெரிவித்ததாவது:
“ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் குடோன் சுற்றியுள்ள மைதானம் வழியாக வாகனங்கள் வருவதால் அடிக்கடி சகதி ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக தார் சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
