வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சக்கரா குட்டை:
தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று (08.11.2025) சக்கரா குட்டை பகுதியில் நடைபெற்றது.
இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தேவிகலா மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் சந்தோஷ் தலைமையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன.
மொத்தம் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது விநியோகச் சீட்டுகள், சரக்கு விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றனர்.
இந்த முகாமை சிறப்பாக நடத்தி, மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைத்த அரசு அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தி: குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
