தருமபுரி மாவட்டம், அரூர்:
மறுமலராச்சி ஜனதா கட்சி சார்பாக “மக்களோடு மக்களாக” என்ற சிறப்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று அரூர் சட்டமன்றத் தொகுதியில் சிறப்பாக தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கட்சியின் நிறுவனர் தலைவர் உயர்திரு ஜெயகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் அவர், மக்களோடு நேரடியாக இணைந்து அவர்களின் இல்லங்களுக்கு சென்று பரிசுப் பொருட்களை வழங்கி, ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணியை தொடங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜெயகுமார், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம், மாநில பொருளாளர் அரங்கநாதன், மாநில இளைஞரணி பார்வையாளர் சுசீந்திரன், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில தலைமை நிலையச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் மோகன் குமார் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினர். மேலும் அரூர் தொகுதி பொறுப்பாளர் சித்தன், நகரச் செயலாளர் வசந்த, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பு, மற்றும் பல மாவட்ட, கிளை, இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக அரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தி: பசுபதி
