Wed. Nov 19th, 2025

நவம்பர் 6

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கீழக்கரை நகர் பகுதி, பொக்கரனேந்தல், இதம்பாடல், நல்லாங்குடி உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று கணக்கீடு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.

வாக்காளர் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் முழுமையாக கேட்டறிந்து பூர்த்தி செய்து வழங்குமாறு வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் கீழக்கரை வட்டாட்சியர் செல்லப்பா மற்றும் பல அரசு அதிகாரிகள் உடன் கலந்து கொண்டனர்.

செந்தில்குமார்
இராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS