தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (நவம்பர் 6, 2025) பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மே 27ஆம் தேதி பட்டா இல்லாத மக்களுக்காக மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை பட்டா வழங்கப்படாததையும், பட்டா பெற தகுதி உள்ளோர் மற்றும் தகுதி இல்லாதோர் குறித்து எந்தத் தீர்மானமும் அறிவிக்காததையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விவசாய தொழிலாளர் சங்க வட்டத் தலைவர் விஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் தோழர் கணபதி, மாவட்ட செயலாளர் தோழர் முத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் தோழர் தனுஷன், தோழர் கிருஷ்ணவேணி, தோழர் கணேசன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தோழர் குறளரசன், வட்டத் தலைவர் தோழர் குப்பன், மாதர் சங்க தோழர்கள் இளவரசி மற்றும் கண்ணகி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பின்னர் வட்டாட்சியர் திரு சின்னா அவர்களிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. பேச்சுவார்த்தையில் பட்டா வழங்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
செய்தியாளர்: டி. ராஜீவ்காந்தி, மண்டல செய்தியாளர்.