திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும் போலியான வேலை அட்டைகள் தயாரித்து, வேலைகள் வழங்கி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புகாரின்படி, வடிவேல் அவர்கள் தன்னுடைய பெயரில் 10 வேலை அட்டைகள், மேலும் தனது ஆதரவாளர்களுடன் 5 வேலை அட்டைகள் என பதிவு செய்து, உண்மையில் வேலை செய்யும் ஏழை மக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த தவறான செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த பணித்தள பொறுப்பாளர்களிடம், வடிவேல் அவர்கள் தவறாகப் பேசி திட்டுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் மீது, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுப்பார்களா? என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.
செய்தி: க.ஏழுமலை (எ) பிரபு,
திருவண்ணாமலை மாவட்ட நிருபர்
