Wed. Nov 19th, 2025

தேனி மாவட்டம் – நவம்பர் 1, 2025:
சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிசேர்வைப்பட்டி ஊராட்சி வளாகத்தில் இன்று (01.11.2025) காலை 11 மணிக்கு உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்துக்கு ஊராட்சி தனி அலுவலர் பா. ஆண்டாள் தலைமையேற்றார்.

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், நிதி அறிக்கை, தணிக்கை விவரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, மனநலம், மழைநீர் சேகரிப்பு போன்ற பல முக்கிய பொதுநல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

🔹 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

2025-26ஆம் ஆண்டிற்கான ஊராட்சி பொது நிதி செலவினம் மற்றும் தணிக்கை அறிக்கைகளுக்கு ஒப்புதல் பெறுதல்.

மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அனைத்து வீடுகள், பள்ளிகள், வணிக நிறுவனங்களில் நிறுவ நடவடிக்கை.

டெங்கு மற்றும் கொசு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தல்;

குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்வது மாதம் இருமுறை அவசியம் என தீர்மானம்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வாய்க்கால்களில் அடைப்புகளை அகற்றுதல், புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைத்தல்.

தூய்மை பாரத இயக்கம் கீழ் “ODF Plus Rising Village” மற்றும் “ODF Plus Model Village” நிலைகள் நோக்கி ஊராட்சி முன்னேற்றம்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHG) உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கல் மற்றும் பதிவுகள் புதுப்பித்தல்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி – தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் மற்றும் சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) வழியாக இலவச பயிற்சிகள்.

மனநலம், போதை விழிப்புணர்வு மற்றும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை பயிற்சிகள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

பாலின சமத்துவம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஊராட்சி மட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.

பள்ளி இடை நிறுத்தல் மாணவர்களை மீண்டும் சேர்த்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.


இந்த கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

📸 அன்பு பிரகாஷ் முருகேசன்
புகைப்படக் கலைஞர் – தேனி மாவட்டம்

 

By TN NEWS