Thu. Nov 20th, 2025



குடியாத்தம், அக். 29:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சர்வே எண் 136/2ல் உள்ள குடியாத்தம் சார்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் பின்புற ஏரியில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றுவது தொடர்பாக இன்று (29.10.2025) மதியம் 2.00 மணியளவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மதியம் 2.15 மணியளவில் குடியாத்தம் ஆர்.எஸ்.நகர் – கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் கூட்டுறவு நியாய விலை கடை (கடை எண்: 04ED002PN) ஆய்வு செய்யப்பட்டது.

இந்நேரத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் திரு. ரங்கநாதன் என்பவர் பொருட்கள் வாங்காத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதால், அவரது இல்லத்தையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் குடியாத்தம் வட்டாட்சியர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தனலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா பிரணவம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, நகர நில அளவர், குறுவட்ட நில அளவர், வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார், செந்தில், கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி, கிராம உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS