Thu. Nov 20th, 2025



குடியாத்தம், அக். 29:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் – காட்பாடி சாலையில், காந்திநகர் அருகே கோர்ட் எதிர்ப்புறத்தில் சாலை உயரமாகவும் அதன் பக்கவாட்டில் பள்ளமாகவும் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது சறுக்கி விழும் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டுவந்தன.

இந்த பிரச்சினையை அப்பகுதி மக்கள் யூனியன் அதிகாரிகளிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, யூனியன் பொது நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் பக்கவாட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ஹேமலதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சாலையை தரமாகவும் விரைவாகவும் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நேரில் ஒப்பந்ததாரர் ராஜா மற்றும் ஓவர் சியர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS