Tue. Jan 13th, 2026



விழுப்புரம், அக்டோபர் 26:
கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட டேனியல் (28) என்பவர் மீது குண்டர் சட்டம் (Goondas Act) பிரயோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சோழம்பூண்டி ஏரிக்கரை அருகே 4.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை வைத்திருந்ததாக டேனியல் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காணை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தனர்.

அவர் சிறையில் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அவர்களின் ஆணைக்கிணங்க டேனியல் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் இன்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்: கே. மாரி

By TN NEWS