அக்டோபர் 26 – குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை ஜெம் மருத்துவமனை ஜீரண மண்டல லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் மற்றும் குடியாத்தம் தாலுக்கா மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்திய குடலிறக்கம் மற்றும் வயிறு தொடர்பான நோய்களுக்கான இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் எஸ். அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவர்கள் டாக்டர் பிரிவினா மற்றும் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு தொப்புள் மற்றும் அடிவயிற்று ஹெர்னியா, முந்தைய அறுவை சிகிச்சை தழும்பில் ஏற்படும் ஹெர்னியா, வயிறு கோளாறு, மகளிர் நலம், கல்லீரல், கணையம், பித்தப்பை கற்கள், சிறுநீரக கோளாறுகள் போன்றவை பரிசோதிக்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட மற்றும் நகர மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள், ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றினர். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்துக்கொண்டனர். மேலும், ஐ பவுண்டேஷன் சார்பில் 60 பேருக்கு கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
📍 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன் – குடியாத்தம் தாலுக்கா