Tue. Jan 13th, 2026



தருமபுரி, அக்டோபர் 25:
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. P. பழனியப்பன் அவர்களின் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மாணவர் அணி சார்பில் இன்று சாமியாபுரம் கூட்ரோடு திருமகள் திருமண மண்டபத்தில் “திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்கள்” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக மாநில மாணவர் அணி செயலாளர் திரு. ராஜீவ்காந்தி மற்றும் மாவட்ட செயலாளர் திரு. P. பழனியப்பன் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள், புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் பெரும் திரளாக பங்கேற்றனர்.

மண்டல செய்தியாளர்: D. ராஜீவ்காந்தி

By TN NEWS